2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மட்டு."வெட்டி வோய்ஸ்" விளையாட்டு கழகம் வெற்ற

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் 26ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம் பெற்ற பத்துக்கு 10 மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு "வெட்டி வோய்ஸ்" விளையாட்டுக் கழகம் 26 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

முன்னால் டொல்பின் விளையாட்டுக்கழக உறுப்பினர் ஜேம்ஸ் மத்தியூஸ் ஞாபகார்த்த கேடயத்துக்காக நடத்தப்பட்ட இந்த சுற்றுப் போட்டியில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் கலந்து கொண்ட போதும், இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு வெட்டி வோய்ஸ் விளையாட்டுக் கழகமும் கல்முனை துளிர் விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய வெட்டி வோய்ஸ் அணியினர் 9;4 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துளிர் அணியினர் 9 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களை பெற்றனர்.

இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக சமூக ஆர்வலர் எம்.கிறோன், கௌரவ அதிதியாக கல்முனை பொதுச் சேவைக் கழகத்தின் நிர்வாகி சிலெஸ்டியன் ஹென்றி ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதம அதிதியாக கலந்து கொண்ட எம்.சிறோன் வெற்றிக் கேடயத்தை வெற்றி பெற்ற வெட்டி வோய்ஸ் அணிக்கு வழங்குவதனை படத்தில் காணலாம்.

இந்த நிகழ்வின் போது டொல்பின் விளையாட்டுக் கழகத்தினால் கடந்த 10வருடங்களில் சுவீகரிக்கப்பட்ட வெற்றிக் கேடயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--