Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 13 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை 'B08 போரம்' நடாத்திய சாதனையன் சம்பியன் கிண்ணம் 2020 இற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை 2கே15 வெற்றிபெற்று சம்பியனானது.அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரியின்(தேசிய பாடசாலை) பழைய மாணவர்களுக் கிடையில் நடத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் 35 அணிகள் பங்கு பற்றி இருந்தன.
அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் நடைபெற்று வந்த இச்சுற்றுப் போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இறுதிப் போட்டி நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்கள்பபு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிள் என்.எம்.அப்துல்லா கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ
அதிதியாக மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சம்சுடீன் மற்றும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,
அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நஸீல், அட்டாளைச் சேனை தேசிய பாடசாலையின அதிபர் ஏ.எல்.கமறுதீன், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இச்சுற்றுப் போட்டியின் முதல் அரை இறுதிப் போட்டி, ஒபேய் அணிக்கும் 2கே 15க்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் 2கே15 அணியினர் அபாரமாக ஆடி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தனர்.
மற்றுமொரு அரை இறுதிப் போட்டி, றப்சான் அணியினருக்கும் 2கே 11 அணியினருக்கும் நடைபெற்றது. இப்போட்டியில் 02கே11 அணியினர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டிக்கான நாணயச் சுழற்சியில் 02கே15 அணியினர் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 5விக்கெட்டுக்கள் இழப்புக்கு 59 ஓட்டங்களைக் குவித்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 2கே11 அணியினர் குறித்த ஓவர் பந்துகளில் 6
விக்கெட்டுக்கள் இழப்புக்கு 51 ஓட்டங் களை மாத்திரமே பெற்றதனால் 2கே15
அணியினர் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது. இரண்டாமிடத்தை 2கே11 அணியினர் பெற்றுக்கொண்டனர்.
குறித்த சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் மற்றும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக எச்.எம்.அஸ்தான் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான பரிசு வழங்கி வைக்கப் பட்டது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago