Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2019 ஜனவரி 18 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், வட மாகாண மாவட்டங்களின் 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் யாழ். மாவட்டம் சம்பியனாகியது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அணியும், யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏ, பி என இரண்டு அணிகளும் பங்குபற்றியிருந்த இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ் மாவட்ட அணியும் வவுனியா மாவட்ட அணியும் தகுதி பெற்றன.
வவுனியா நகரசபை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ். மாவட்ட அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கிணங்க, முதலில் துடுப்பெடுத்தாடிய வவுனியா மாவட்ட அணி, 27.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில், சாருஜன் 29, திவாகர் 18, தர்சன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நிதுசன், விதுசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 95 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ். மாவட்ட அணி, 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தி,ல் பானுஜன் 31, ஜெயதர்சன் 19, இயலரசன் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றனர்.
இறுதிப் போட்டியின் நாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர்களாக முறையே யாழ். மாவட்ட அணியைச் சேர்ந்த விதுசன், பானுஜன், நிதுசன் ஆகியோர் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago