Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். செல்வராஜா
சர்வதேச, தேசிய மட்டத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊவாவில் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வான வர்ண இரவு நிகழ்வு, எல்லை “மவுன்ட் ஹெவன்” விடுதியில் நேற்றிரவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, ஊவா மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் சாலிய சுமேத சில்வா ஆகியோர் பிரதம, சிறப்பு, கௌரவ விருந்தினர்களாககலந்து கொண்டிருந்தனர்.
இவ்வர்ண இரவு நிகழ்வில், 125 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் சர்வதேச, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெற்றவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் என்றடிப்படையிலும், வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் என்றடிப்படையிலும், வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் என்றடிப்படையிலும், 32 இலட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஊவா மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம், மேற்படி வர்ண இரவு கௌரவிப்பு விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
06 Jul 2025