2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(நவம்)
 
அகில இலங்கைப் பாடசாலை அணிகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற அளவெட்டி அருணோதயாக் கல்லூரி வீர வீராங்கனைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், தெல்லிப்பளை கல்விக்கோட்ட  கல்விப் பணிப்பாளர் ச.கைலாயநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இக்கல்லூரி மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பெற்றுக் கொண்டதுடன், ஆறு போட்டிகளில் மூன்று தங்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .