2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

ஆளுநர் மாநாட்டில் வவுனியா கலைஞர்களின் கலை நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

யாழ்ப்பாணத்தில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆளுநர் மாநாட்டின்போது, வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்வுகளை வழங்கவுள்ளதாக மாவட்ட கலாசார உத்தியோகஸ்த்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்தார்.

வரவேற்பு கீதம், வரவேற்பு நடனம் (தமிழ்), வரவேற்பு கீதம் (சிங்களம்), சிங்கள பாராம்பரிய நடனம், முஸ்லிம் பாரம்பரிய நடனம் ஆகிய கலை நிகழ்வுகளில்  வவுனியாவிலுள்ள கலைஞர்கள் பங்குபற்றவுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இசை இளவரசர் கந்தப்பு ஜெந்தனின் இசையமைப்பில் தமிழில் உருவாக்கப்பட்ட வரவேற்பு கீதத்திற்கு வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி அதிபர் நிருத்தியவாணி ரி.யாழினி வீரசிங்கத்தின் மாணவிகள் நடனமாடவுள்ளனர்.

இதேவேளை, வவுனியா ஈரற்பெரியகுளம் பரக்கும் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பாரம்பரிய நிகழ்வையும் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் ஜனாப் எம்.எல்.றமிசீனின் நெறியாள்கையில் வித்தியாலய மாணவிகளின் றபான் நடன நிகழ்வும் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .