2021 மே 06, வியாழக்கிழமை

மதுபாலகிருஷ்ணனின் 'மதுரகானம்' மாபெரும் இசை நிகழ்ச்சி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு, வெஸ்லி கல்லூரியில் நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிப்பதற்கு நிதி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் பெருமாள் கஜேந்திரன் தெரிவித்தார்.
 
சுமார் 3 கோடி ரூபா செலவில் இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி இந்திய இசைக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

'மதுரகானம்' எனும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியானது பிரபல தென்னிந்தியப் பாடகர் மதுர குரலோன் மதுபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன், இந்திய ஜூனியர் சூப்பர் சிங்கர்களான நித்தியஸ்ரீ, ஸ்ராவன் ஆகியோருடன் இந்திய திரைப்பட நடனக் கலைஞர் ஜெயலக்ஷ்மியின் நடனங்களும் இதில் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, விஜய் தொலைக்காட்சி அலைவரிசைப் புகழ் சிவகார்த்திகேயன் இந்த இசை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கவுள்ளதுடன் சித்தாரா இசைக் குழுவினர் இசை வழங்கவுள்ளனர் என்று வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவரான கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .