2021 மே 10, திங்கட்கிழமை

'குருதி தோய்ந்த காலம்' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கலாபூஷணம் யூ.எல்.ஆதம்பாவா எழுதிய 'குருதி தோய்ந்த காலம்' கவிதை நூல் வெளியீடு சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கல்முனை கலை இலக்கிய கலாசார  பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற கல்வி பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மெற்றோபொலிடன் கல்லூரி தவிசாளரும் கல்முனை மாநகரசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

இதன்போது, கல்முனை மாநகர சபை முகாமைத்துவ உதவியாளர் ஏ.ஜி.ஈ.எம்.நிம்ஸாத் நூல் வெளியீட்டு உரையையும் தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் ரமீஸ் அப்துல்லா, கவிஞர் நவாஸ் சௌபி மற்றும் எழுத்தாளர் மு.சடாட்சரம் ஆகியோர் இரசனை உரையினையும் கலாபூஷணம் கே.எம்.ஏ அஸீஸ் கவி ஆசியினையும், ஏற்புரையினை நூலாசிரியர் கலாபூஷணம் யு.எல்.ஆதம்பாவும் நிகழ்த்தினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X