2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தமிழ் திரைப்படத்துடன் இலங்கையில் ஆரம்பமாகும் ஐரோப்பிய திரைப்பட விழா

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனி அவன் எனும் தமிழ் திரைப்படத்துடன் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய திரைப்பட விழா இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஐந்தாவது தடவையாக கொழும்பில் நடைபெறும் ஐரோப்பிய திரைப்பட விழா, எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பதினான்கு ஐரோப்பிய திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன. இதில் தெரிவு செய்யப்பட்ட சில காட்சிகள் யாழ்ப்பாணம் மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களிலும் இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வில் இலங்கையை சேர்ந்;த அசோக்க ஹந்தகம இயக்கிய இனி அவன் எனும் தமிழ் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

இந்த திரைப்பட விழாவினை கொழும்பிலுள்ள எட்டு ஐரோப்பிய தூதுவராலயங்களின் கலாசார பிரிவுகள் மற்றும் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X