2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மன்னாரில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய பிறப்பின் நூற்றாண்டு விழா  நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நினைவுகூறப்படுகின்றது.

இந்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் இந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தொடக்கவிழா, நிறைவு விழா உட்பட ஆய்வரங்குகள், இலக்கிய அரங்குகள், கலை அரங்குகள் என எட்டு அரங்குகள் இடம்பெறவுள்ளன.
அனைத்து அரங்குகளும் மன்னார் நகர மண்பத்தில் இடம்பெறும். இவ்விழாவில் பங்குகொள்வதற்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், கல்விமான்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என பலரும் மன்னாருக்கு வருகைதரவுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணிவரை தொடக்க விழாவும் மதியம் 2 மணி முதல் 5 மணிவரை  இலக்கிய அரங்கும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணிவரை கலை அரங்கும் இடம்பெறும்.  சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12  மணிவரை ஆய்வரங்கும் பகல் 2 மணி முதல் 5 மணிவரை இலக்கிய அரங்கும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணிவரை கலை அரங்கும் இடம்பெறும்.  ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணிவரை ஆய்வரங்கும் பகல் 2 மணி முதல்  6.30 மணிவரை நிறைவு விழாவும் இடம்பெறும்.

ஆய்வரங்குகள் தவிர ஏனைய அரங்குகளில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்படவுள்ளன.  தொடக்க விழாவின்போது 'தமிழாழி' என்ற பெயரில் நூற்றாண்டு விழா மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

மன்னார் நகரின் பொது நூலகத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதிக்கு அருகாமையில் தனிநாயகம் அடிகளாரின் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது. அத்துடன், மன்னார் பனங்கட்டுக்கொட்டுப் பகுதியில் உள்ள கடலேரி வீதி 'தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் வீதி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--