2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் வெளியீடு

Super User   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியரும் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான  பொத்துவில் அஸ்மின் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.40 மணிக்கு இலங்கை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு வைரமுத்துவும் சிறப்புரையை வித்தக கவிஞர் பா.விஜயும் வழங்கியுள்ளனர்.

'காப்பியக்கோ' டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் தேசிய தலைவருமான ரவூப்ஹக்கீம்கலந்துகொள்கின்றார்.

நூல் அறிமுகத்தை 'தமிழ் தென்றல் அலி அக்பரும் கவி வாழ்த்தினை கவிஞர் கிண்ணியா அமீரலியும் நூலாய்வினை பேராசிரியர் கலாநிதி துரை மனோகரன் வழங்க, கருத்துரைகளை மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், எழுத்தாளர் உடுவை தில்லை நடராஜா, கவிஞர் முத்துமீரான் மற்றும்  ஹனீபா இஸ்மாயில் ஆகியோர் வழங்குகின்றனர்.

விழா நிகழ்ச்சிகளை சிரேஷ்ட அறிவிப்பாளர் நாகபூசணியுடன் இணைந்து வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு பொறுப்பதிகாரி அறிவிப்பாளர் எம்.எஸ்.எம்.இர்பான்  தொகுத்து வழங்குகின்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--