2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

உலகின் மிக நீளமான சொகுசு கார் தயாரித்து சாதனை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த காரின் நீளம் 100 அடியாகும். 26 சக்கரங்களை கொண்ட இந்த காரில், ரயில்களில் உள்ளது போல் முன்பகுதியில் ஒரு டிரைவர் கேபினும், பின் பகுதியில் ஒரு டிரைவர் கேபினும் அமைந்துள்ளது.

குறுகிய தெருக்களிலும் சுலபமாக திரும்பும் வகையில், காரின் நடுப்பகுதி வளைந்து, மடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் கண்காட்சிகளில் வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த கார் முதலில் தயாரிக்கப்பட்டது.

ஹொலிவூட்டில் உள்ள ஆடம்பர பங்களாவுக்கு இணையாக இந்த காரின் உள்ளே, அனைத்து சொகுசு வசதிகளும் செய்யப்படுள்ளன.

நீச்சல் குளம், பார், ஹெலிபேட், செயற்கைக்கோள் அன்டெனா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மினி அரண்மனை போல் உள்ளது இந்த 'மெகா' கார்.

இந்த சொகுசு காருக்கு சட்டபூர்வமாக சாலைகளில் ஓடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. எனினும், சினிமா படப்பிடிப்பு, திருமண ஊர்வலம் போன்றவற்றிற்கு இந்த காரை வாடகைக்கு எடுக்க, உலக கோடீஸ்வரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகின் மிக நீளமான சொகுசு கார் என்று கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த காரின் ஒரு மணி நேர வாடகை, பல லட்சம் ரூபாயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இனி வெளியாகும் ஆங்கில திரைப்படங்களில் இந்த கார் 'சூப்பர் ஸ்டார்' தகுதியைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .