Editorial / 2026 மே 15 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ. சக்திவேல்
குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தை, 'Magneto Tellurics Audio Frequency' (MTAF) எனும் நவீன ஸ்கேனிங் முறைக்கு உட்படுத்தக் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாகக் காத்தான்குடிக்கு நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் மறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, வியாழக்கிழமை (14.05.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் பகிரங்கமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்குப் பங்குதாரர்கள் அனைவரும் நீதிமன்றில் சமூகமளித்திருந்தனர்.
அன்றைய தினம் பிற்பகல் குறித்த பகுதிக்குக் கள விஜயம் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், திடீரெனப் பெய்த கடும் மழை காரணமாக ஆய்வுகளை மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டது. இதன் நிமித்தம் வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை (15.05.2026) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, சம்பந்தப்பட்ட பகுதியில் அதிநவீன ‘Magneto Tellurics Audio Frequency’ ஸ்கேனிங் முறையைப் பயன்படுத்தி ஆய்வுகளை முன்னெடுக்க மன்று கட்டளை பிறப்பித்தது. இந்த அனுமதியைத் தொடர்ந்து, பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினர் தமது முதற்கட்ட ஸ்கேனிங் பணிகளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளனர்.
இவ்விடயம் குறித்து முறைப்பாட்டாளர் ரவூப் அப்துல் மஜீத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கருத்துத் தெரிவிக்கையில், “மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.







32 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
1 hours ago