George / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேவதாஸ் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித்தை வைத்து ஒரு பாடலை படமாக்கிய சஞ்சய் லீலா பன்சாலி, இப்போது அதே பாணியில் ப்ரியங்கா, தீபிகாவை வைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்.
பிங்கா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல், அண்மையில் வெளியிடப்பட்டது. நடன இயக்குநர் ரெமோ டி சோசா இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
தேவதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் போன்று இந்தப்பாடலும் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரத் திரைப்படமான பஜ்ராவ் மஸ்தானி, டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி வெளிவரவுள்ளதுடன் ரன்வீர் சிங், ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய பாத்திரங்களில நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
59 minute ago