George / 2016 ஜூலை 10 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம், மருத்துவ கல்லூரி மாணவர் இருவர், தெரு நாயொன்றை 4ஆவது மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பையடுத்து சென்னையிலுள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு 50 இந்திய ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிவூட் நடிகைகளான அலியாபட் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் கடும் எதிரப்பு வெளியிட்டுள்ளனர்.
'இது முற்றிலும் அபத்தமானது!!! நான் திகைத்துவிட்டேன்!!! என அலியாபட், டுவிட்டர் வலைதளத்தில் கோபமான பதிவொன்றை இட்டுள்ளார்.
'உங்களால் நாயொன்றுக்கு தீங்கு விளைவித்து 50 ரூபாய் அபராதம் கொடுத்து உங்கள் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்? இவ்வாறான செயல்களை பார்த்து உங்கள் பிள்ளைகளும் வளர்வார்கள்?' என அனுஷ்கா சர்மா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025