2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

இவர்தான் உண்மையான ரித்திகா சிங்: அதிர்ச்சித் தகவல்

George   / 2016 மார்ச் 09 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிச்சுற்று திரைப்படம் முழுக்க முழுக்க தமிழகத்தை சார்ந்த துளசி ஹெலன் என்பவரின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்துக்காக இயக்குநர் சுதா, இந்தியாவில் உள்ள பல குத்துச்சண்டை வீராங்கனைகளை சந்தித்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், உண்மையாகவே துளசி ஹெலனின் கதையாம்.

திரையரங்கில் தன் நண்பர்களுடன் திரைப்படம் பார்த்து அதிர்ச்சியடைந்த துளசி இதுப்பற்றி இயக்குனர் சுதாவிடம் முறையிட்டபோது, நான் உன்னை போல் 100 பேரை சந்தித்தேன். அவர்களும் இதையே தான் கூறினார்கள் என்று சிம்பிளாக கூறிவிட்டாராம்.

'என்ன இருக்கட்டும், குத்துச்சண்டையில் இத்தனை கொடுமை பெண்களுக்கு இருக்கின்றது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சுதாவுக்கு சல்யூட் என்றார். ரித்திகா சிங்கை தலையில் தூக்கி கொண்டாடும் இளைஞர்கள், திரைப்படக்குழுவினர்கள், திரைப்பிரபலங்கள் இந்த ரியல் ரித்திகா சிங்கையும் கொஞ்சம் கவனிப்பார்களா?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--