2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கபாலி திரைப்படத்தில் வசனம் எழுதிய ரஜினி

George   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்தும் ஒரு காட்சிக்கு வசனம் எழுதியுள்ளார் என்ற தகவலை திரைப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சீனர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆங்கிலேய தோட்ட முதலாளியிடம் ரஜினிகாந்த் உணர்ச்சி பொங்க பேசும் காட்சியில் இடம் பெற்றுள்ள ஆங்கில வசனத்தை ரஜினிகாந்த் எழுதியுள்ளார்.

'அந்த வசனத்தை நான் முதலில் தமிழில் எழுதியிருந்தேன். அதைப் படித்துப் பார்த்த ரஜினிகாந்த்;, அவரே அதை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பேசினார்' என ரஞ்சித் கூறியுள்ளார்.

கபாலி திரைப்படம் வெளியான தினத்திலிருந்தே அதில் இடம் பெற்றுள்ள வசனங்களுக்காகவும் பேசப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, 'காந்தி கோட் போடாததற்கும், அம்பேத்கார் கோட் போட்டதற்கும் பின்னாடி ஒரு அரசியல் இருக்கு', 'நீங்கள் ஆண்ட பரம்பரைடா, இனி நாங்கள் ஆளப் பிறந்தவங்கடா', 'நாங்கள் கோட்சூட் போட்டால் உங்களுக்குப் பிடிக்காதா, முன்னேறினா உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா', போன்ற வசனங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான், ரஜினி வசனம் எழுதிய தகவலை ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .