2020 நவம்பர் 28, சனிக்கிழமை

சூப்பர் ஸ்டாருக்கு மோடி வாழ்த்து

George   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று 66-வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று அண்மையில்  அறிவித்திருந்தார். பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--