2021 மே 08, சனிக்கிழமை

தள்ளிபோகாதே இல்லாமல் தள்ளிபோன ரிலீஸ்

George   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌதம் மேனன் இயக்க, சிம்பு-மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை இம்மாதம் 19ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் ஜூலை மாதம் வெளியிட முடிவு செய்தனர்.

சிம்புவின் கோல்ஷீட் சொதப்பலால் தள்ளிப் போகாதே பாடலை படம்பிடிக்க முடியாத கௌதம் மேனன், தனது அடுத்த திரைப்பட வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.

இந்நிலையில் சிம்பு-கௌதம் மேனன் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஓகஸ்ட் 19ஆம் திகதி திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தள்ளிப் போகாதே பாடல் இல்லாமல் திரைப்படம் வெளியாகும் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே அப்பாடல்தான் என்பதால் பாடலை எப்படியும் படப்பிடிப்பு செய்துவிடுவார்கள் என்று நம்பலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X