2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

பிரபல நடிகர், மனைவிக்கு கொரானா.. அதிர்ச்சியில் திரையுலகம்

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்கார் விருது பெற்ற நடிகர் டொம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி நடிகை ரீட்டா வில்சன் இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை டொம் ஹாங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

அவரும் 63 வயதாகும் டொம் ஹாங்க்ஸ் மற்றும் வில்சனும் ஆஸ்திரேலியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

அங்கு டொம் ஹாங்க்ஸ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர்கள் சோர்வாகவும், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் உணர்ந்தனர். 

தேவைப்படும்வரை தாங்கள் சோதனை, கவனிப்பு மற்றும் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவோம் என்று டாம் ஹாங்க்ஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X