2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

வைரலாகும் சாக்‌ஷி அகர்வாலில் குளியல் வீடியோ

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் முதல் முறையாக யானை மீது அமர்ந்து போட்டோஷூட் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். 

யூகன், திருட்டு விசிடி, ஆத்யன், க க க போ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வந்த காலா படத்திலும், அஜித் நடிப்பில் வந்த விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.

சாக்‌ஷி அகர்வால் அதிகளவில் பிரபலமானதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியும், கவினும் தான். விஜய் டிவியில், ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானாலும், கவின் – சாக்‌ஷி அகர்வால் காதல் காட்சிகளால் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சாக்‌ஷி அகர்வால் போட்டோஷூட்டே கதி என்று இருக்கிறார். தற்போது கூட யானை மீது அமர்ந்து கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். 

முதன் முறையாக யானை மீது அமர்ந்து கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ள சாக்‌ஷி அகர்வாலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதில், படுத்திருக்கும் யானை மீது சாக்‌ஷி அகர்வால் இருபுறம் கால் இருந்தவாறு அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அப்போது யானை தண்ணீரை அவரது மிது அடிக்கிறது. 

இதில், தனது கையால் கண்ணை மறைத்துக்கொள்வது போன்று வீடியோ காட்சி அமைந்துள்ளது. 

இது குறித்து அவர் கூறுகையில், போட்டோஷூட்டின் போது ராஜா (யானை) உடன் கலவையான உணர்ச்சிகள்,அதிகப்படியான நேரம் யானை உடன் இருந்தேன். இதுவரை இல்லாத ஒரு அனுபவம். 

எனது சிறந்த அனுபவங்களில் இதுவும் ஒன்று. இது 2020 ஆம் ஆண்டுக்கான காலண்டர் போட்டோஷூட். இதற்காக எல்லா அனுமதியையும் வாங்கியுள்ளோம். இந்த போட்டோஷூட்டிற்கு பிறகு யானைக்கு எந்த தீங்கும் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .