2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

ஓட்டோக்களை திருடும் கும்பல் கைது

Editorial   / 2026 ஜனவரி 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவத்துகொட - கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​யட்டியந்தோட்டை, பலாங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சந்தேக நபர்களால் திருடப்பட்ட மேலும் பத்து முச்சக்கர வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் திருடிய முச்சக்கர வண்டிகளின் நிறம், chasy எண்கள் மற்றும் எண் தகடுகளை மாற்றி, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனைக்கு தயார் செய்து, விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் களனி, அம்பலாந்தோட்டை, பரக்கடுவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .