2021 மே 08, சனிக்கிழமை

விஜய் திரைப்படத்தை இயக்கும் ரஞ்சித்... புதுத் தகவல்

George   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைய தளபதி விஜய் நடிப்பில் திரைப்படமொன்றை இயக்குநர் ரஞ்சித் இயக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி கோடாம்பாக்கத்தை சூடாக்கியுள்ளது.

ஒரே வாரத்தில் இந்திய ரூ.326 கோடி வசூல் சாதனை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித், தற்போது கோலிவூட்டின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் உள்ளார்.

ரஞ்சித்தின் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது.

மேலும் ரஞ்சித் தனது உதவியாளர் ஒருவர் இயக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கின்றாராம். இந்த திரைப்படத்தில் அதர்வா நாயகனாக நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில் இளையதளபதி விஜய்யை அண்மையில் ரஞ்சித், சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், அவருடைய கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் மிக விரைவில் விஜய்-ரஞ்சித் இணையும் திரைப்படம் குறித்த தகவல் வெளிவரும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X