2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஸ்ரீதேவியின் 50 ஆண்டுகள்

George   / 2017 மே 24 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு இரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி, திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ளன.

கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி “துணைவன்” என்றத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் “நம்நாடு”, சிவாஜிகணேசனுடன் “வசந்தமாளிகை” போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.

அதன் பின்னர், 1976ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த “மூன்று முடிச்சு” திரைப்படத்தின் மூலம் நாயகியாக மாறினார். நாயகியான பின்னர் அவர் கொடுத்த வெற்றித் திரைப்படங்கள் கணக்கிலடங்காது. கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே ராசியான ஜோடியாக வலம் வந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவரவுள்ள “மாம்” திரைப்படம் அவரது 300ஆவது திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை அவர் அறிமுகமான முதல் திரைப்படம் வெளியான அதே ஜூலை 7ஆம் திகதி வெளியிட, ஸ்ரீதேவியின் கணவரும் “மாம்” திரைப்படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் நான்கு மொழிகளுக்கும் அவரே டப்பிங் குரல் கொடுக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. ரவி உத்யவார் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X