2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மீண்டும் சென்னையில் ஜக்கி சான்

A.P.Mathan   / 2010 ஜூலை 12 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொலிவூட்டில் அதிக சம்பளம் பெறுகின்ற ஒரேயொரு ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரிய ஜக்கி சான் மீண்டும் சென்னைக்கு வருகிறார். 2008ஆம் ஆண்டு தசாவதாரம் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வில் ஜக்கி கலந்துகொண்டிருந்தார்.


கடந்தமுறை ஒஸ்கார் ரவிச்சந்திரனின் அழைப்பின் பேரிலேயே அவர் சென்னைக்கு வந்திருந்தார். இப்பொழுது ரவிச்சந்திரனின் அண்ணன் விஸ்வாஸ் சுந்தர், ஜக்கியினை அழைத்திருக்கிறார்.

ஜக்கி சானின் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘லிட்டில் பிக் சோல்ஜர்’. இந்தப் படத்தின் தமிழ் உரிமையினை விஸ்வாஸ் சுந்தர் பெற்றிருக்கிறார். அத்தோடு ஆங்கில படத்தினையும் அவரே இந்தியாவில் வெளியிடுகிறார். இப்படத்தின் பிரத்தியேக காட்சியில் கலந்துகொள்வதற்காகவே ஜக்கி சான் மீண்டும் சென்னைக்கு வரவிருக்கிறார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--