2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மன உளைச்சலுக்கு உள்ளானேன் - சினேகா

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"என்னைக் காதலிப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்குமாறும் பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவர் தினமும் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் நான் மன உளைச்சலுக்கு உள்ளானேன். சினிமா படப்பிடிப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே ராகவேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகை சினேகா நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவர் கையடக்க தொலைபேசி மூலமான குறுந்தகவல்களை அனுப்பி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தொடர்பான வழக்கில் நடிகை சினேகா சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றில் ஆஜராகி  சாட்சியம் அளித்தார்.

இது தொடர்பில் கடந்த 2008ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்ற இளைஞர் மீது மத்திய குற்றப் பிரிவு பொலிஸில் சினேகா முறைப்பாடு செய்திருந்தார். அதில், ராகவேந்திரா தனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறியிருந்தார்.

இதையடுத்து பொலிஸார் ராகவேந்திராவைக் கைது செய்தனர். அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சினேகா, அவருடைய தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி உள்ளிட்ட 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இதையடுத்து குறித்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஒத்தி வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நீதிமன்றத்துக்கான சினேகா வருகையைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--