Freelancer / 2026 மார்ச் 10 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானியத் தயாரிப்பு ஆளில்லா விமான தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு கோரி, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 11 நாடுகளிடம் இருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளன என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இது குறித்துக் கூறுகையில்,
உயிர்களைப் பாதுகாப்பதில் உக்ரைனுக்கு இருக்கும் அனுபவம், ஆளில்லா விமானங்களை இடைமறிக்கும் தொழில்நுட்பங்கள், இலத்திரனியல் போர்முறை அமைப்புகள் மற்றும் பயிற்சிகள் ஆகியவற்றில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அந்த நாட்டு மக்களின் உயிரைக் காக்கவும் உதவி வரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான பதிலளிக்க உக்ரைன் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைப் பாதுகாக்க உக்ரைன் தனது நிபுணர்களையும், ட்ரோன் இடைமறிப்பு கருவிகளையும் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .