2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பிரியாமணியின் சூடான முத்தம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பருத்திவீரனில் அழகான கிராமத்து பெண்ணாக நடித்து, விருதுபெற்ற பிரியாமணி- தெலுங்கில் கவர்ச்சி மழை பொழிந்துவருகிறார். நீச்சலுடையிலும் தயங்காமல் நடித்துவரும் பிரியாமணி, தெலுங்கியில் சுமந்த்துடன் நடித்துவரும் புதிய படம் ‘றிம்ஜிம்’.

இத்திரைப்படத்தினை விஜி என்பவர் இயக்குகிறார். நிஜமான காதல் ஜோடியாகவே பிரியாமணியும் சுமந்த்தும் மாறி நடித்து வருகிறார்களாம். இதனால் இயக்குநருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. இருப்பினும் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என பிரியாமணியிடம் இயக்குநர் கேட்டிருக்கிறார். அதற்கு பிரியாமணி பச்சைக்கொடி காட்டிவிட்டாலும் கதாநாயகன் சுமந்த் தயங்கியிருக்கிறார்.

சுமந்தினை தனியாக அழைத்து, முத்தத்தின் தன்மை பற்றி விளக்கியிருக்கிறார் பிரியாமணி. அதன்பின்னர் உதட்டோடு உதடுபதித்து முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்களாம். இந்த காட்சியை படமாக்கும்போது இயக்குநரும் ஒளிப்பதிவாளரையும் தவிர வேறு யாரும் அவ்விடத்தில் இருக்கவில்லையாம். ஆகையினால்தான் முத்தம் 'ரொம்ப சூடாக' வந்திருப்பதாக இயக்குநர் விஜி குறிப்பிட்டிருக்கிறார்.


  Comments - 0

  • pandiyarajan Thursday, 17 February 2011 09:17 PM

    செய்திகள் மிகவும் நன்றாக உள்ளது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--