A.P.Mathan / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

லிங்குசாமியின் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் லிங்குசாமி படத்திலிருந்து சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் கடுப்பாகியிருந்த சிம்பு, சற்று ஓய்ந்த பின்னர் இப்பொழுது லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ திரைப்படத்தில் நாயகனாக ஆர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரொடக்ஷன் தான் ‘வேட்டை’ படத்தினை தயாரிக்கிறது. அண்மைக்காலமாக சூப்பர் ஹிட் பாடல்களை அதிகமாக வழங்கிவரும் யுவன்சங்கர் ராஜா இப்படத்திலும் தனது கைவரிசையை காட்டவிருக்கிறார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக யாரைப்போடலாம் என்று பலரை நாடியிருக்கிறார்கள். இறுதியாக வேட்டையாடுவதற்கு சிறந்தவர் 'தமன்னா' என லிங்குசாமி அறிவித்திருக்கிறார். ஆகையினால் ஆர்யாவுடன் வேட்டைக்கு தயாராகிவிட்டார் தமன்னா. வெகுவிரைவில் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

5 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago