2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

உயரமாகியது என் தப்பா?

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நான் உயரமாக இருப்பதாக சொல்லி தமிழ் கதாநாயகர்கள் என்மீது பழியைப் போடுகிறார்கள். அவர்கள் குள்ளமாக இருப்பதற்கு நான் என்ன செய்யமுடியும்? என கடுப்பாகியிருக்கிறார் அனுஷ்கா.

சிங்கம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடித்தபோது இருவருக்கும் உயரம் பொருந்தாதது பல இடங்களில் தென்பட்டது. இதற்கு அனுஷ்காவை எல்லோரும் குறை சொல்லியதால் கடுப்பாகி தெலுங்கு பங்கம் ஒதுங்கியிருந்தார். இவரை ஒருவாறு சமாதாப்படுத்தி சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மறுபடியும் வேறு தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் அனுஷ்காவை அணுகியபோது 'தமிழ் படமும் வேண்டாம் தமிழ் நடிகர்களும் வேண்டாம். உங்கள் கதாநாயகர்கள் குள்ளமாக இருப்பார்கள் பிறகு என்மீது பழியை போடுவார்கள். எதுக்கு வம்பு, எனக்கு தெலுங்கில் தாராளமாக வாய்ப்புகள் இருக்கின்றன, அதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன்...' என்று தமிழில் வந்த வாய்ப்புக்களை உதறித்தள்ளியிருக்கிறார் அனுஷ்கா.


  Comments - 0

  • Abdul Bari Wednesday, 20 October 2010 05:09 PM

    என்னை மறந்துட்டியே அனுஷ்கா. நான் ரெடி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--