2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

தங்கைக்காக மர்ம உறுப்பை வெட்டி வீசிய அண்ணி

Editorial   / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தங்கைக்காக, கணவனின், தம்பியின் மர்ம உறுப்பை மனைவி வெட்டி வீசிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது...

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். பொறியியலாளரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்தது.

யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா.  தனது தங்கையை தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் என அர்ச்சனா கூறி வந்தார்.இந்த நிலையில் யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அப்போது தனது தங்கையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. எனது தங்கைக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறியபடி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து யோகேஷின் மர்ம உறுப்பை வெட்டி வீசி எறிந்துள்ளார்.

வலியால் துடித்த யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .