2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ப்ளேபோய்க்கு ஏற்பட்ட கஷ்டம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரியாணி'. 'கதாநாயகன் என்ற வகையின் தன்னை திரையில் காட்டாமல் சென்னையிலுள்ள சாதாரண இளைஞனாக அதுவும் நான் எதிர்ப்பார்த்ததைப் போல் 'ப்ளேபோய்' மாதிரி கதாபாத்திரம் வழங்கியதற்கு இயக்குநருக்கு நன்றி' என்று பிரியாணி கதாநாயகன் கார்த்தி அண்மையில் அறிவித்திருந்தார்.

ஆனால், அந்த ப்ளேபோய் கதாபாத்திரமே தற்போது அத்திரைப்படம் வெளியாவதற்கு சிக்கலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கார்த்தி - ஹன்சிகா நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கியுள்ள பிரியாணி படத்துக்கு சென்சார் அதிகாரிகள் யு ஏ சான்று அளித்துள்ளது. இத்திரைப்படத்தை எத்தனை முறை காட்டினாலும், அதற்கு யு சான்று தரமுடியாது என்று ரிவைசிங் கமிட்டி அதிரடியாக மறுத்துள்ளதாம்.
 
இதனால் கேளிக்கை வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இத்திரைப்படத்தை ஹைதராபாதில் உள்ள ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு போனார்கள் தயாரிப்பாளர்கள். திரைப்படத்தைப் பார்த்த ரிவைசிங் கமிட்டி அதிகாரிகள், இத்திரைப்படத்துக்கு யு சான்றிதழ் தர முடியாது என்றும், யு ஏ சான்றுதான் பொருத்தமானது என்றும் கூறிவிட்டார்களாம்.

இதனால் இத்திரைப்படத்துக்கு வரிவிலக்கும் கிடைக்காது, டிவியிலும் ஒளிபரப்ப முடியாது. இந்த திரைப்படத்தில் கார்த்தி பெண் பித்தராக வருகிறாராம். எனவே பல காட்சிகள் பலான பட ரேஞ்சுக்கு இருப்பதால் யு சான்று கிடைப்பது கஷ்டம் என்று சென்சாரில் கூறியுள்ளனராம்.  Comments - 0

  • ruby Thursday, 19 December 2013 04:51 AM

    சூப்பர் பிரியானி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--