2021 மார்ச் 06, சனிக்கிழமை

விட்டுக்கொடுக்கும் விஜய் சேதுபதி

George   / 2015 ஜூலை 27 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் தனது திரைப்படத்தில் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்கும் ஹீரோ என்றார் அது விஜய் சேதுபதிதான்
விஜயசேதுபதி நடிக்கும் திரைப்படங்களைப் பார்த்தால் அவருக்கு மட்டுமே கதையில் முக்கியத்துவம் இல்லாமல், உடன் நடிக்கும் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

அந்த வகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் அவர் அதிகமாக பேசவே மாட்டார். அவரை சுற்றியிருந்த நண்பர்கள்தான் அதிக வசனம் பேசியிருந்தனர்.

அதேபோல், ரம்மி திரைப்படத்தில் இனிகோ பிரபாகர் நாயகனாக நடிக்க, விஜயசேதுபதி இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்திலும் இன்னொரு ஹீரோவுக்கு விட்டுக்கொடுத்து நடித்திருந்தவர், இப்போது இடம்பொருள் ஏவல் திரைப்படத்தில் விஷ்ணுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தான் தயாரித்து வசனம் எழுதி நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்திலும், தனக்கு ஜோடியோ, டூயட்டோ இல்லாத 55 வயது முதியவர் கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜயசேதுபதி. ஆனால், இந்த திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் திலக்குக்கு ஹீரோ போன்ற வேடத்தை கொடுத்திருக்கிறார் விஜயசேதுபதி. 

ரமேஷ்திலக்குக்குத்தான் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புதுமுக நடிகை அஷ்ரிதாவுடன் லவ், டூயட் எல்லாம் உள்ளதாம். விஜயசேதுபதி திரைப்படத்தில் தனக்கு இத்தனை பெரிய ரோல் கிடைத்ததால் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருக்கிறார் ரமேஷ் திலக்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .