2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சோனம் - ஜெக்குலின் நட்பைப் பார்த்து வியக்கும் பொலிவூட்

George   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் திரையுலகமே மூக்கின்மீது விரலை வைத்து வியக்கும் அளவுக்கு நடிகைகளான சோனம் கபூரும் ஜெக்குலின் பெர்ணான்டஸூம் நெருங்கிய தோழிகளாக உள்ளனராம்.

பொலிவூட் திரையுகில் நடிகைகள் இருவர் தோழிகளாக இருப்பது மிக மிக கஷ்டம் என்பதுடன் முன்னணி நடிகைகள் பலர், ஒருவரைக் கண்டால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லும் இந்நிலையில் தான் பொலிவூட்டில் இந்த இரண்டு நடிகைகளும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

மனதில் உள்ளதை டக் டக்கென்று பேசி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொள்பவர் சோனம் கபூர். அவரது பேச்சாலேயே அவர் பல எதிரிகளை சம்பாதித்துள்ளார்.

இலங்கையில் இருந்து வந்து மும்பையில் தங்கி பொலிவூட் திரைப்படங்களில் நடித்து வரும் ஜெக்குலின் பெர்ணான்டஸ் என்றால் சோனம் கபூருக்கு உயிர். சோனம் என்றால் ஜெக்குலினுக்கு அதைவிட மேல்.

சோனம் கபூரின் வீட்டில் எந்த விசேஷமும் ஜெக்குலின் இல்லாமல் நடக்காது என்ற நிலையில். அவர்களின் நட்பை பார்த்து பொலிவூட்டே வியக்கிறது.

இதுபோதாதென்று, எங்கு சென்றாலும் கைகோர்த்து செல்கிறார்கள் சோனமும் ஜெக்குலினும். 'சோனம் என் சகோதரி போன்றவர். அவரைப் போன்ற ஒருவர் என் வாழ்வில் வந்ததால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். சோனம் கபூருக்கு தங்க மனசு. அவர் அன்பானவர், எங்கள் இருவரின் வாழ்வில் ஒளிவுமறைவு இல்லை, இருவரின் திரைப்படங்கள் பற்றியும் பேசிக் கொள்வோம்' என்று ஜெக்குலின் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .