2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பிகினியில் அசத்தும் அனுஷ்கா

George   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பில்லா திரைப்படத்துக்கு பின்னர் மீண்டும் பிகினியில் களமிறங்கியுள்ளாராம் நடிகை அனுஷ்கா.

அருந்ததியில் ஆரம்பமான அனுஷ்காவின் மார்க்கெட் இப்போது வரை அட்டகாசமாகவே உள்ளது.  தமிழ், தெலுங்கு  என இரண்டு  திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், ஹீரோக்களுக்கு இணையாகவும் என்னால் நடிக்க முடியும் என்பதையும் அவ்வப்போது நிரூபித்து வருகிறார்.

அனுஷ்காவுக்கென்று ஒரு தனி திறமை இருக்கின்றது, பாகுபலியில் தேவசேனா கேரக்டரில் தனது தோற்றத்தையே மாற்றிக்கொண்டு நடித்திருக்கும் அனுஷ்கா, அடுத்தபடியாக ராணி ருத்ரம்மா தேவியில் அதிரடி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

குதிரையில் அமர்ந்தபடி வாள் சண்டை போட்டுள்ளார். அதோடு, ஏராளமான நகைகளை உடம்பெங்கும் அணிந்து கொண்டு நடித்துள்ளார். இப்படி சரித்திர கதைகளில் நடித்தபோதும், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்துக்காக தனது எடையை அதிகரித்து நடித்திருக்கிறார் அனுஷ்கா.

அதோடு, இந்த திரைப்படத்தில் பிகினி உடையணிந்தும் நடிக்கிறாராம். இதற்கு முன்பு தெலுங்கில் பிரபாசுடன் நடித்த பில்லா திரைப்படத்தில் பிகினி அணிந்து நடித்த அனுஷ்கா, அதையடுத்து இப்போதுதான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .