2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அங்கோடை வைத்தியசாலைக்கு 500 உள் நோயாளர் தங்கக்கூடிய புதிய கட்டிடம்

Super User   / 2010 ஜூன் 12 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கோடை மன நோயாளர் வைத்தியசாலை 500 உள் நோயாளர் தங்கக்கூடிய அளவில் வைத்தியசாலைக்கு வெளியே புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்க உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜயான் மென்டிஸ் தெரிவித்தார்.

பல நோயாளிகளுக்கு நீண்ட கால சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். எனினும் அவர்களின் குடும்பத்தினர் வந்து அவர்களை வந்து அழைத்து செல்வதில்லை. தற்பொழுது 200க்கு மேற்பட்ட நோயளிகள் குணமடைந்தும் வீடு செல்லாமல்  வைத்தியசாலையில் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், வைத்தியசாலைக்கு வெளியே புதிய கட்டிடம் நிர்மாணிப்பதன் பிரதான நோக்கம் நோயளிகள் சமூகத்துடன் இணைந்து பழக வேண்டும்என்பதற்காகத்தான். அத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் பாதுகாவளர்களின் தகவல்களை பெற உள்ளதாகவும் டாக்டர் ஜயான் மென்டிஸ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--