2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

அதிக வெப்பம் தொடர்பில் அறிவுறுத்தல்

Editorial   / 2020 மார்ச் 05 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது அதிக வெப்பம் நிலவி வருகின்றது.  இந்த நிலையில் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பில் மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளும் கர்ப்பிணி தாய்மார்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் நிலவுவதால், பல்வேறு நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

கடும் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த அதிகமாக நீர் அருந்துமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பாடசாலைகளின் இல்ல விளையாட்டு போட்டிகள், கிரிக்கெட் போட்டிகள் என்பன நடத்தப்படுவதால், மாணவர்கள் அவதானத்துடன் இருத்தல் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X