2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு அவசியம் - இந்தியப்பிரதமர்

Super User   / 2010 ஜூன் 09 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வாழ் அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை இலங்கை அரசு வழங்க வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பல வருடங்களாக இலங்கையில் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட வேண்டும். அத்துடன் 13ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் நிபந்தனைகளுடனான ஒரு தீர்வுத்திட்டத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.அத்துடன் அவர்களுக்கு தேவையான புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு வசதிகளையும் இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்  என இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--