Editorial / 2017 ஜூன் 01 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக உரியவாறு சட்டத்தை அமுல்படுத்துவதுடன், அந்த முரண்பாடுகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு விடயங்களைத் தெளிவுபடுத்தக்கூடிய பொதுச் செயற்றிட்டத்தின் தேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக் காட்டினார்.
அதற்காக அனைத்து மதத் தலைவர்களும் ஓர் அரங்குக்கு வர வேண்டும். அவர்கள், நாட்டில் ஒற்றுமையின்மையை விதைக்கும் இன,
மத முரண்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாதெனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (31) பிற்பகல் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான ஆலோசனைப் பேரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகள் தொடர்பில் அந்தந்த மாவட்ட மட்டத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்காக தனது ஆலோசனைக்கமைய அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக் குழுவை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்த வேண்டியதன் முக்கியத்தவத்தையும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
அத்துடன், மதங்களுக்கிடையிலான ஆலோசனைப் பேரவை ஆகக்குறைந்தது மாதத்துக்கு ஒரு தடவையாவது கூட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி;, இன்று இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை தொடர்பான விசேட விதந்துரைகளை தான் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்படும் இன, மத முரண்பாடுகளின் போது நடுநிலையாகவும், பக்கச்சார்பற்றும் செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மத, இன மக்களும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சமாதானமான நாட்டையே அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
8 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago