2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அமெரிக்க பெண்மீது ஐதராபாத்தில் பாலியல் வல்லுறவு

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அறக்கட்டளை ஒன்றில் பணியாற்றும் ஹெலன் (வயது 25) என்னும் பெண், கடந்த சிலகாலங்களாக பணிநிமிர்த்தம் ஐதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அண்மையில் தன்னை துப்பாக்கிமுனையில் ஒருவர் கற்பளித்துவிட்டதாக பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

இரவுவேளை ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளேவந்த மர்மநபர், துப்பாக்கிமுனையில் தன்னை கற்பளித்துவிட்டதாகவும் போகும்போது 5 லட்சம் பணத்தினையும் எடுத்துக்கொண்டு போய்விட்டதாகவும் பொலிஸில் புகார் கொடுத்திருந்தார். துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார் உடனடியாக மோப்பநாய் சகிதம் அவரது வீட்டிற்குச் சென்று பார்ந்தபோது ஜன்னல் உடைந்ததற்கோ வேறு எந்த தடயங்களோ சிக்கவில்லை. இதனால் அந்தப் பெண்ணின் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

தனது காதலனுடன் ஏற்பட்ட தகறாறின் காரணமாகவே அப்பெண் போலியான தகவலை பொலிஸாருக்கு தெரிவித்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐதராபாத் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--