Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 17 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதி முகாமைத்துவத்தில் இருக்க வேண்டிய தூய்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாத்து, தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் பாடுபடுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில், இன்று (17) ஆரம்பமான பணச்சலவை தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழுவின், 20ஆவது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“பண சலவை தொடர்பில் அனைத்து நாடுகளும் முகம்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்வதாயின், அது தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிணைப்புகள், உடன்பாடுகள் மற்றும் சமவாயங்களை உரியவாறு அமுல்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் நேர்மையுடன் பாடுபட வேண்டும்.
“பணச்சலவையை தடுப்பதன் மூலம் அனைத்து நாடுகளிலும் தேசிய பொருளாதாரம் பலமடையும். மேலும், சர்வதேச ரீதியிலும் நிதி முகாமைத்துவத்தில் மிக முக்கியமானது.
“அரச நிதி முறைகேடு மற்றும் பணச்சலவை தொடர்பில் செயற்படுவதற்காக இலங்கை அரசாங்கம் பலமான அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்பை நிறுவியுள்ளதுடன், அந்த நிறுவனம் தற்போது மிகவும் வினைத்திறனாகவும் வெற்றிகரமாகவும் செயற்படுகிறது” என்றார்.
பணத்தூய்மையாக்கல் ஊடாக பயங்கரவாத அமைப்புகளுக்கும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பெருமளவு நிதி கிடைப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் என்ற வகையில் பணச்சலவையை தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நன்றாக இனங்கண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பணச்சலவை தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்பாடுகள், சமவாயங்கள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு அமைவாக அவற்றை உரியவாறு அமுல்படுத்த எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற வகையில் எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .