2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், நாளை (21) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது, யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால், நாளை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--