2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

அரநாயக்கவில் ஆணின் சடலத்துக்கு 2 பெண்கள் சண்டை

Kanagaraj   / 2016 மே 23 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரநாயக்க சாமசர மலையில் மண்சரிவு ஏற்பட்டதனால் காணாமல்போனவர்களைத் தேடும் பணிகள், நேற்றுத் திங்கட்கிழமை ஐந்தாவது நாளாகவும்; தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இராணுவ வீரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். தேடுதல் பணிகள், நேற்றுக்காலை முதல் கிரமமாக முன்னெடுக்கப்பட்டன.

எனினும், பிற்பகல் 11 மணிக்கு பெய்ய ஆரம்பித்த மழை, சுமார் ஒருமணிநேரம் நீடித்தது. இதனால், மீட்புப் பணிகள் மந்தமாகின அத்துடன், மாலைவேளையில் அப்பகுதியில் மோசமாக வானிலையே நிலவியது.

நேற்றைய தேடுதலின் போது, சடலமொன்று மீட்கப்பட்டதுடன், மனித உறுப்புகள் சில மீட்கப்பட்டன. அப்பகுதியிலிருந்து மொத்தமாக 35 சடலங்கள், இதுவரையிலும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலத்துக்கு, பெண்கள் இருவர் உரிமை கோரியமையால் பொலிஸார்

பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். எனினும், சடலத்தைக் கையளிக்காத பொலிஸார், மரண விசாரணைகளின் பின்னரே சடலத்தைக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .