Kogilavani / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
அரிசிக்கு இயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு கறுப்பு சந்தை ஏற்படுவதை தவிர்க்க எதிர்வரும் மார்ச் மாதம் வரை அரிசி இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடாகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
காலநிலை மற்றும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தும் அதிகாரம் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வரை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படலாம்.
நாட்டின் தேவைக்கு ஏற்றளவு அரிசி இருந்தாலும் கறுப்பு சந்தையை உருவாக்க பலர் முயற்சிக்கலாம். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அரிசி இறக்குமதிக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது'
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago