2021 ஜனவரி 23, சனிக்கிழமை

அலரி மாளிகையில் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை?

Editorial   / 2019 நவம்பர் 17 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களையும், இன்று (17) நண்பகல் அலரிமாளிகையில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு அழைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள்  தற்போது அறிவிக்கப்படும் நிலையில், அதில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இந்த கூட்டம் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .