2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஆணைக்குழுவை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை பலப்படுத்தும் முகமாக, புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

இது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பணியகம் இணக்கம் தெரிவித்துள்ளது.   
அதன்படி, குறித்த பணியை முன்னெடுப்பதற்கு அந்நிறுவனம் 235,000 அமெரிக்க டொலர்களை (கிட்டத்தட்ட 35.25 மில்லியன் ரூபாய்) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.   

இதற்கமைய, குறித்த தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .