2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

’ஆயுத குழுவுக்கு புத்துயிர் கொடுக்கவே களமிறங்கியிருக்கிறார்’

Editorial   / 2020 ஜனவரி 11 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

தனது பழைய ஆயுத  குழுவுக்கு புத்துயிர் கொடுக்கவே, கருணா அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில்  களமிறங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரையில் சில பேரினவாத சக்திகளின் கைகூலிகள் அம்பாறை தமிழ் மக்களை கூறுபோட களமிறங்கியுள்ளன. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்து, எமது மக்களை நிர்க்கதியான நிலைக்கு தள்ளுவதே இவர்களின் திட்டமெனவும் தெரிவித்தார்.

கருணாவின் வேலைத்திட்டங்கள் மீண்டும் இந்த நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டமாகவே நான் பார்க்கின்றேன். கடந்த காலங்களிலே பல கடத்தல்களையும் ,கொள்ளைகளையும் ,கொலைகளையும் செய்த நபர்கள் உள்வாங்கி மீண்டும் இந்த நாட்டிலே ஒரு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--