2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

இன்று மழை பெய்யும்

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உஷ்ணமான வானிலை தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் இன்று மாலை வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மத்திய, வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு, மன்னார், அநுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிலும் 2 மணியளவில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் அதிக காற்றுவீச்சு, இடி ,மின்னல் தோன்றக்கூடிய நிலைமை காணப்படுவதாக அவதானமாக இருக்குமாறு அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு, மட்டக்களப்பு, காங்கேசன்துறை, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரத்தில் மழைவீழ்ச்சி பதிவாகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .