Editorial / 2020 ஜனவரி 12 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருவேறு பகுதிகளில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரம் - பாதெனிய வீதியில் மஹவ உடுவேரிய ரந்தெனிகம சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (12) அதிகாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், காரில் பயணித்த பெண்கள் இருவர், ஆண்கள் இருவர் மற்றும் சிறு குழந்தை ஆகியோர் காயமடைந்து மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குருநாகல் - கெப்பற்றிகல வீதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் மஹவ மற்றும் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
3 hours ago
05 Nov 2025