2025 ஜூலை 12, சனிக்கிழமை

இலங்கையில் மனித உரிமை மீறல்; நிபுணர்கள் குழு விசாரணை

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர்கள் குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவிருப்பதாக நிபுணர்கள் குழுவின் தலைவர் மர்சூகி தருஸ்மன் தெரிவித்தார்.

மேற்படி நிபுணர்கள் குழுவின் தலைவரான மர்சூகி தருஸ்மன் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எந்தவித பாகுபாடுகளுமின்றி யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகள்  இடம்பெறும் என்று மர்சூகி தருஸ்மன் கூறினார்.

நிபுணர்கள் குழுவின் விசாரணையானது இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்தே ஆரம்பிக்கப்படும் என்று இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

எனினும், நிபுணர்கள் குழுவின் விசாரணைகள் சுதந்திரமான முறையில் முன்னெடுக்கப்படும் என்றும்  மர்சூகி தருஸ்மன் குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்வாறு இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதானது அநாவசியமற்ற செயலெனவும் இலங்கை தெரிவித்தது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .